Advertisement

சதீஷ் – ஆதி சாய்குமார் நடித்துள்ள ‘பத்து நாள் ராஜா’ டீசர் வெளியீடு!

‘கூகுள் குட்டப்பா’ படத்தின் இயக்குநர் குரு சரவணன், தற்போது சதீஷ் மற்றும் தெலுங்கு நடிகர் ஆதி சாய்குமார் இணைந்து நடிக்கும் ‘பத்து நாள் ராஜா’ படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.

மொபைல் செயலிகள் மூலம் கடன் பெறுவதால் ஏற்படும் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. எஸ்ஜிஎஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் சுரேஷ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்கிறார்.

ஆடுகளம் நரேஷ், சரவணன், கருடா ராம் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். படத்தின் வெளியீட்டுத் தேதி இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Add a Comment

Leave a Reply