தனுஷ் அணிந்த கைக்கடிகாரத்தின் விலை என்ன தெரியுமா?

சென்னையில் நடைபெற்ற ‘ஓம்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் நடிகர் தனுஷின் உடை மற்றும் தோற்றம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. குறிப்பாக, அவர் அணிந்திருந்த கைக்கடிகாரம் சமூக வலைதளங்களில் வைரலானது. சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த ‘வான்கார்ட்’ நிறுவனத்தின் ‘ஆர்ப் ஃப்ளையிங் டூர்பில்லன்’ மாடல் கைக்கடிகாரத்தை அவர் அணிந்திருந்தார். இதன் விலை சுமார் 2.5 லட்சம் அமெரிக்க டாலர்கள் எனக் கூறப்படுகிறது. இந்திய மதிப்பில் சுமார் ரூ.2.2 கோடி ஆகும். 18 கேரட் ரோஸ் கோல்டு மற்றும் நீல நிற செராமிக் மூலம் உருவாக்கப்பட்டுள்ள இந்தக் கடிகாரம், வழக்கமான கடிகாரங்களில் இருந்து மாறுபட்ட சுழலும் அமைப்பைக் கொண்டுள்ளது.

Add a Comment

Leave a Reply