கிரீஸ் நாட்டில் கோலாகலமாக நடைபெற்ற அனிருத்- காவ்யா மாறன் திருமணம்… வைரல் கிளிக்ஸ் !

தமிழ் சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான அனிருத் ரவிச்சந்தர் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தலைமை செயல் அதிகாரி காவ்யா மாறனின் திருமணம் கிரீஸ் நாட்டில் நேற்று கோலாகலமாக நடைபெற்றது ‌. நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் இவர்களது திருமணம் நடைபெற்றது.

கிரீஸில் நடைபெற்ற இந்த திருமண விழாவில் நடிகர் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ரஜினிகாந்த், முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தயாநிதி மாறன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

திருமணத்தைத் தொடர்ந்து, அனிருத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தங்களது திருமண புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். இந்தப் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், ரசிகர்களும் திரையுலகப் பிரபலங்களும் தம்பதிக்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இதனைத் தொடர்ந்து, நவம்பர் 21ஆம் தேதி சென்னையில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதில் திரையுலகம், அரசியல் மற்றும் விளையாட்டுத் துறைகளைச் சேர்ந்த முக்கியப் பிரபலங்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Add a Comment

Leave a Reply