தொலைக்காட்சித் தொடரில் மீண்டும் நடிக்கும் நடிகை பாவனா!

மலையாளத் திரையுலகில் இருந்து தமிழுக்கு வந்த நடிகை பாவனா, மிஷ்கின் இயக்கிய ‘சித்திரம் பேசுதடி’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானார். தொடர்ந்து ‘வெயில்’, ‘தீபாவளி’, ‘கூடல் நகர்’, அஜித்துடன் ‘அசல்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். தற்போது புதிதாகத் தொடங்கப்பட்டுள்ள சோனி விழா தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவிருக்கும் ‘நோட்புக் 90ஸ்: காதல் பிளாஷ்பேக்’ என்ற தொடரில் நடிக்கிறார்.

பள்ளி மாணவர்களிடையே ஏற்படும் இனக்கவர்ச்சியை காதல் எனத் தவறாகப் புரிந்துகொள்வதால் உருவாகும் பிரச்சினைகளை மையமாகக் கொண்டு இத்தொடர் உருவாகிறது. இதில் மாணவர்களின் பிரச்சினைகளைத் தீர்க்கும் ஆசிரியையாக பாவனா நடிக்கிறார். சதாசிவம் இயக்கும் இத்தொடருக்கு திரைப்பட இயக்குநர் மித்ரன் ஜவஹர் கிரியேட்டிவ் இயக்குநராகப் பணியாற்றுகிறார்.

நவம்பர் 23-ம் தேதி முதல் இரவு 7.30 மணிக்கு சோனி விழா தொலைக்காட்சியில் இத்தொடர் ஒளிபரப்பாகிறது. பின்னர் சோனி லிவ் ஓடிடி தளத்திலும் வெளியாக உள்ளது. இதுகுறித்து பேசிய மித்ரன் ஜவஹர், 90-களில் இருந்த நட்பு, குடும்ப உறவுகள் மற்றும் அக்கால வாழ்க்கையின் அழகான தருணங்களை மீண்டும் நினைவூட்டும் வகையில் தொடர் அமைந்திருப்பதாகத் தெரிவித்தார். இதைப் பார்க்கும் ஒருவர் தனது பழைய நண்பர்களையோ, மறக்க முடியாத நினைவுகளையோ புன்னகையுடன் நினைத்துப் பார்த்தால் அதுவே தனக்கு மகிழ்ச்சி என்றும் கூறியுள்ளார்.

Add a Comment

Leave a Reply