நஸ்லனின் மிரட்டலான அறிமுகம் – ‘சீன்’ படத்தின் புதிய வீடியோ வெளியீடு!

‘ஆவேஷம்’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஜித்து மாதவன் இயக்கும் ‘சீன்’ படத்தில் சூர்யா போலீஸ் அதிகாரியாக நடித்து வருகிறார். சூர்யா, ஜோதிகாவின் 2டி என்டர்டெயின்மென்ட் மற்றும் ழகரம் ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு சுஷின் ஷ்யாம் இசையமைக்க, வினீத் அகஸ்டியன் ஒளிப்பதிவு செய்கிறார். சுமார் ரூ.100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் இப்படம், சூர்யாவின் இரண்டாவது தயாரிப்பு நிறுவனமான ழகரம் புரொடக்ஷன்ஸ் சார்பிலும் தயாரிக்கப்படுகிறது.

‘கருப்பு’, ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ படங்களைத் தொடர்ந்து சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ‘சீன்’ திரைப்படம் நவம்பர் 6-ம் தேதி வெளியாக உள்ளது.

இப்படத்தின் முதல் பாடலான ‘ஆத்தி யார்ரா இவ’ பாடலை ராஜ்பிரியன் எழுதி பாடியுள்ளார். அவர் எழுதிய மற்றொரு பாடலான ‘ஏரோபிளேன்’ பாடலை கானா பாலா பாடியுள்ளார். இந்நிலையில், நஸ்லன் நடித்துள்ள கதாபாத்திரத்தின் அறிமுக வீடியோவைப் படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் ஈஸ்வரன் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் நஸ்லன், உணர்ச்சிகளும் கருணையும் இல்லாத நபராகக் காட்டப்பட்டுள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading