அர்ஜுன் தாஸ் நடிக்கும் ‘ஜான் டோ’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!

இயக்குநர் மதுமிதா இயக்கத்தில் அர்ஜுன் தாஸ் நடிக்கும் புதிய கிரைம் திரில்லர் திரைப்படத்திற்கு ‘ஜான் டோ’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

இப்படத்தில் அர்ஜுன் தாஸுடன் சஞ்சனா நடராஜன், சிருஷ்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ‘பாகுபலி’ உள்ளிட்ட பிரம்மாண்ட படங்களைத் தயாரித்த அர்கா மீடியா ஒர்க்ஸ் நிறுவனம் சார்பில் பிரசாத் தேவினேனி மற்றும் சோபு யார்லகட்டா இப்படத்தைத் தயாரிக்கின்றனர்.

படத்தின் கதை மற்றும் திரைக்கதையை மதுமிதா, நிக்கோலஸ் செவாலியருடன் இணைந்து எழுதியுள்ளனர். முஜீப் மஜீத் இசையமைக்க, பிரீதா ஜெயராமன் ஒளிப்பதிவு செய்கிறார். விஜய் வெங்கடராமன் படத்தொகுப்பையும், தினேஷ் சுப்பராயன் சண்டைப் பயிற்சி இயக்கத்தையும் கவனிக்கின்றனர்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading