தள்ளிப்போகிறதா ரஜினியின் ‘தர்மன்’? உலாவும் புது தகவல்!

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள ‘ஜெயிலர் 2’ திரைப்படம் வரும் 15-ம் தேதி வெளியாகவுள்ளது. இதையடுத்து, ‘ஓ மை கடவுளே’, ‘டிராகன்’ படங்களை இயக்கிய அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்து வருகிறார். கமல்ஹாசன் தயாரிக்கும் இப்படத்திற்கு ‘தர்மன்’ எனப் பெயரிடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இந்தப் படம் 2027 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது வெளியீட்டுத் தேதியில் மாற்றம் ஏற்படலாம் எனத் தகவல் வெளியாகியுள்ளது. நீண்டகாலமாகத் தாமதமாகி வரும் கமல்ஹாசனின் ‘இந்தியன் 3’ படத்தைப் பொங்கலுக்கு வெளியிடத் திட்டமிடப்படுவதாகவும், இதனால் ‘தர்மன்’ படத்தை 2027 கோடை விடுமுறைக்கு மாற்றுவது குறித்து ஆலோசிக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

மேலும், ‘தர்மன்’ படத்தின் வெளியீடு தொடர்பாக கமல்ஹாசன், ரஜினிகாந்துடன் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எனினும், வெளியீட்டுத் தேதி மாற்றம் குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading