Advertisement

ஓடிடியில் வெளியாகும் ஊர்வசி – ஜோஜூ ஜார்ஜ் நடித்துள்ள ‘ஆஷா’ திரைப்படம்!

ஊர்வசி, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்டோர் நடித்துள்ள மலையாளத் திரைப்படமான ‘ஆஷா’ ஓடிடி வெளியீட்டுக்குத் தயாராகியுள்ளது. திரையரங்குகளில் நல்ல விமர்சனங்களைப் பெற்ற இப்படம், வரும் அக்டோபர் 16-ம் தேதி ZEE5 தளத்தில் வெளியாகும் எனப் படக்குழு அறிவித்துள்ளது.

அறிமுக இயக்குநர் சஃபர் சனல் இயக்கத்தில் உருவான இப்படம், செப்டம்பர் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. உளவியல் பின்னணியில் உருவான இப்படத்தில் ஊர்வசியின் நடிப்பு ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் பாராட்டுகளைப் பெற்றது. இதில் ஐஸ்வர்யா லட்சுமி, ஊர்வசியின் மகளாக நடித்துள்ளார். மது நீலகண்டனின் ஒளிப்பதிவும் படத்தின் முக்கிய அம்சங்களில் ஒன்றாகப் பாராட்டப்பட்டது.

அஜித் விநாயக ஃபிலிம்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். சமீபத்தில் ‘உள்ளொழுக்கு’ திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான தேசிய விருதை ஊர்வசி வென்றிருந்த நிலையில், தற்போது ‘ஆஷா’ படமும் ஓடிடியில் வெளியாக இருப்பது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Add a Comment

Leave a Reply