‘டோன்ட் ட்ரபுள் தி ட்ரபுள்’ திரைப்படம் எப்படி இருக்கு? – திரை விமர்சனம்!

ஆம்புலன்ஸ் டிரைவராக இருக்கும் ஃபஹத் பாசில், பணத்துக்காக பெட்டிங் உள்ளிட்ட வழிகளில் வருமானம் தேடி வாழ்க்கையை நடத்துகிறார். ஒரு கட்டத்தில் ஸ்மக்ளிங் தொழிலில் ஈடுபடும் மகேஷ் மஞ்ச்ரேக்கருடன் ஏற்படும் பிரச்சனையால் ரூ.25 லட்சம் கொடுக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுகிறார். அந்த நேரத்தில் அவரிடம் எதிர்பாராத மேஜிக் பொருள் ஒன்று கிடைக்கிறது. அதிலிருந்து ஒரு சிறுமி வெளிவர, அதன் பிறகு ஃபஹத்தின் வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்களே படத்தின் மீதிக்கதை.

ஃபஹத் பாசில் தனது வழக்கமான நடிப்புத் திறனை வெளிப்படுத்தியிருக்கிறார். அதே நேரத்தில், அவர் ஏற்கனவே நடித்த சில சமீபத்திய கதாபாத்திரங்களின் சாயல் இந்தப் படத்திலும் இருப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. குறிப்பாக ‘வேட்டையன்’, ‘மாரீசன்’ உள்ளிட்ட படங்களின் நினைவு சில இடங்களில் வருகிறது.

சிறுமியாக நடித்துள்ள பேபி சாரா படத்தின் மற்றொரு கவனிக்கத்தக்க அம்சம். அவரது க்யூட்டான ரியாக்ஷன்களும் நடிப்பும் படம் முழுவதும் ரசிகர்களை கவரும் வகையில் அமைந்துள்ளன. ஃபஹத்துடன் இணைந்து பல காட்சிகளில் தனது பங்களிப்பை சிறப்பாக செய்துள்ளார்.

ஆனால் ஃபஹத், சாராவைத் தாண்டி படத்தில் பெரிய அளவில் கவரக்கூடிய அம்சங்கள் இல்லை. காமெடி, எமோஷன், ஃபேண்டஸி என பல விஷயங்களை இணைக்க முயன்றிருந்தாலும், அவை எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. முதல் பாதியில் படத்தின் அடிப்படை கான்செப்ட் ஓரளவு ஆர்வத்தை ஏற்படுத்துகிறது. ஆனால் இரண்டாம் பாதியில் திரைக்கதை வேகம் குறைந்து நீளமாகத் தோன்றுகிறது.

இசை, ஒளிப்பதிவு உள்ளிட்ட தொழில்நுட்ப அம்சங்களும் சராசரி அளவிலேயே உள்ளன. வித்தியாசமான கான்செப்ட்டை எடுத்திருந்தாலும், அதை முழுமையாக சுவாரஸ்யமான திரை அனுபவமாக மாற்றுவதில் படம் தடுமாறுகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading