தன்னைச் சுற்றி வரும் விமர்சனங்கள் குறித்து வேதனை தெரிவித்த மவுனி ராய்!

நடிகை மவுனி ராய் குறித்து சமூக வலைதளங்களில் அவ்வப்போது பல்வேறு தகவல்களும் விமர்சனங்களும் வெளியாகி வருகின்றன. குறிப்பாக, கணவரை விவாகரத்து செய்யப் போவதாகவும், பாலிவுட்டைச் சேர்ந்த இளம் நடிகர் ஒருவருடன் காதலில் இருப்பதாகவும் தகவல்கள் பரவின. அதேபோல் நடிகை திஷா பதானியுடனான அவரது நட்பையும் வைத்து சில விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

தன்னைப் பற்றிய இந்த தொடர் விமர்சனங்கள் குறித்து தற்போது மவுனி ராய் வெளிப்படையாக தனது வேதனையை பகிர்ந்துள்ளார். ஒருவரை கொச்சைப்படுத்திப் பேசுவதன் மூலம் என்ன கிடைக்கிறது என்றும், தங்களது வார்த்தைகள் அந்த நபரின் மனதை எந்த அளவுக்கு பாதிக்கும் என்பதை ஏன் புரிந்துகொள்ள முடியவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தன்னைப் பற்றி பேசுவதற்கு ஒன்றுமில்லை என்ற அளவுக்கு ஏற்கனவே விமர்சித்துவிட்டதாகவும், மிகவும் கொச்சைப்படுத்தியும் பேசியிருப்பதாகவும் மவுனி ராய் தெரிவித்துள்ளார். இதையெல்லாம் கடந்து தான் தொடர்ந்து சென்று கொண்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார். தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான தகவல்கள் மற்றும் சமூக வலைதள விமர்சனங்கள் குறித்து மவுனி ராய் இவ்வாறு வெளிப்படையாக பேசியிருப்பது தற்போது கவனம் பெற்றுள்ளது.

Add a Comment

Leave a Reply