வதந்திகளை பார்த்தால் சிரிக்க தான் தோன்றுகிறது… நடிகை பூஜா ஹெக்டே!

தமிழ், தெலுங்கு, இந்தி என பல்வேறு மொழிகளில் நடித்து வரும் பூஜா ஹெக்டே, தற்போது இந்திய அளவில் கவனம் பெற்ற நடிகையாக வலம் வருகிறார். மிஷ்கின் இயக்கிய ‘முகமூடி’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான அவர், தொடர்ந்து பல மொழி படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான ‘ஜனநாயகன்’ படத்திலும் நடித்திருந்தார். அடுத்ததாக துல்கர் சல்மானுடன் ‘ஸ்ரீ ஸ்ரீ’ படத்தில் நடித்து வருகிறார்.

திரையுலகில் தொடர்ந்து பிஸியாக இருக்கும் பூஜா ஹெக்டேவை சுற்றி அவ்வப்போது தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதுபற்றி சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது. தன்னைப் பற்றி வெளியாகும் சில வதந்திகளை பார்க்கும்போது முதலில் கோபம் வந்தாலும், இறுதியில் அவை தனக்கு சிரிப்பை வரவழைப்பதாக பூஜா ஹெக்டே தெரிவித்துள்ளார். குறிப்பாக, தனக்கே தெரியாத சில விஷயங்கள் எப்படி மற்றவர்களுக்கு தெரிகிறது என்பது ஆச்சரியமாக இருப்பதாக அவர் கூறினார்.

மேலும், தன்னைப் பற்றிய சில தகவல்களை பார்க்கும்போது அவை எங்கிருந்து உருவாகின்றன என்பதே புரியாது என்றும், இதுபோன்ற விஷயங்களை ஒவ்வொன்றாக பெரிதுபடுத்திக் கொண்டிருக்காமல் கடந்து செல்வதே நல்லது என்றும் பூஜா ஹெக்டே தெரிவித்துள்ளார். அவரது இந்தப் பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.

Add a Comment

Leave a Reply