விஜய் சேதுபதி -பாலாஜி தரணிதரன் கூட்டணியில் உருவான ‘பத்தா’ டிரெய்லர் வெளியீடு

‘நடுவுல பக்ககொஞ்சம்த்த காணோம்’, ‘சீதக்காதி’ படங்களைத் தொடர்ந்து விஜய் சேதுபதி – இயக்குநர் பாலாஜி தரணிதரன் மீண்டும் இணைந்துள்ள படம் ‘பத்தா’. இந்தக் கூட்டணியின் மூன்றாவது படமாக உருவாகியுள்ள இதில் லிஜோமோல் ஜோஸ் கதாநாயகியாக நடிக்கிறார். சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.

அட்லீயின் ஏ பார் ஆப்பிள் ஸ்டுடியோஸ் மற்றும் ஸ்டார் ஸ்டுடியோஸ் 18 – சினி1 ஸ்டுடியோஸ் இணைந்து இப்படத்தை தயாரித்து வருகின்றன. அக்டோபர் 1-ம் தேதி திரைக்கு வர உள்ள இப்படத்தின் இரண்டாவது பாடலான ‘ஊரோட ஒத்த டான்’ சமீபத்தில் வெளியானது. கானா ஜீவா எழுதிய அந்தப் பாடலை விக்கி, தமிழ் ஆதவன் மற்றும் சாய் அபயங்கர் பாடியுஇணைந்துள்ளனர்.

தொடர்ந்து தற்போது படத்தின் டிரெய்லரையும் படக்குழு வெளியிட்டுள்ளது. விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் மற்றும் படத்தின் கதைக்களம் தொடர்பான எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில் வெளியாகியுள்ள டிரெய்லர், சமூக வலைதளங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading