ரஜினிகாந்த் சாயல் குறித்த பேச்சு – ரிஷிகாந்த் சொன்னது என்ன?

‘மொத ராத்திரி’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான ரிஷிகாந்த், தனது முதல் படத்திலேயே ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களின் கவனத்தை பெற்றுள்ளார். ராஜா கருப்பசாமி இயக்கிய இப்படம் அவரது சினிமா பயணத்தில் முக்கியமான திருப்புமுனையாக அமைந்துள்ளது.

சினிமாவில் முன்னணி கதாபாத்திரத்தை பெறுவதற்காக சுமார் 15 ஆண்டுகள் முயற்சி செய்த ரிஷிகாந்த், ‘டெம்பிள் மங்கீஸ்’ யூடியூப் தளம் மூலம் தனது கலைப் பயணத்தை தொடங்கினார். பின்னர் ‘ஹீரோ’, ‘இந்தியன் 2’, ‘கூலி’ உள்ளிட்ட படங்களிலும், ‘மாதகம்’ இணையத் தொடரிலும் சிறிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.

‘மொத ராத்திரி’ வெளியான பிறகு, ரிஷிகாந்தின் உடல் மொழி, தோற்றம் மற்றும் பேச்சு வழக்கில் ரஜினிகாந்தின் சாயல் இருப்பதாக சமூக வலைத்தளங்களில் கருத்துகள் வெளியாகி வருகின்றன. இதுகுறித்து பேசிய அவர், ரஜினிகாந்துடன் தன்னை ஒப்பிட்டு பேசுவது தொடர்ந்து தனது கவனத்திற்கு வந்து கொண்டிருப்பதாக தெரிவித்துள்ளார்.அதே நேரத்தில், யாருடைய சாயலாகவும் அறியப்படுவதை விட, தனக்கென ஒரு தனித்துவமான அடையாளத்தை உருவாக்குவதையே விரும்புவதாக ரிஷிகாந்த் கூறியுள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading