நிறம் மாற நான்கு நாட்கள் வெயிலில் நின்றேன்… சிவாஜி கணேசனின் பேரன் தர்ஷன் கணேசன் டாக்!

சிவாஜி கணேசனின் பேரன் தர்ஷன் கணேசன் ஹீரோவாக அறிமுகமாகும் படம் ‘லெனின் பாண்டியன்’. செப்.25-ம் தேதி வெளியாகும் இப்படத்தை டி.டி.பாலச்சந்திரன் இயக்கியுள்ளார். கங்கை அமரன், ரோஜா, ஸ்ரத்தா ராவ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இளையராஜா இசையமைத்துள்ள இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது.

இந்நிலையில் தர்ஷன் கணேசன் அளித்துள்ள சமீபத்திய பேட்டி ஒன்றில், படத்தில் அதிகாரத்துக்கு எதிராக இரண்டு சாதாரண மனிதர்கள் போராடும் கதைக்களம் இடம்பெறுகிறது. இதில் போலீஸ் அதிகாரியாக நடித்துள்ள தர்ஷன், அந்த கதாபாத்திரத்தை இயல்பாக கொண்டு வருவதற்காக மதுரையில் உள்ள ஒரு போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்று ஒரு நாள் முழுவதும் போலீஸாரின் செயல்பாடுகளை கவனித்துள்ளார். அந்த அனுபவம் கதாபாத்திரத்தை உருவாக்க உதவியதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், கதை மதுரையைச் சுற்றி நடப்பதால் தனது தோற்றமும் உடல் மொழியும் அதற்கேற்றபடி இருக்க வேண்டும் என்பதற்காக நான்கு நாட்கள் வெயிலில் நின்று உடலை மாற்றியுள்ளார். மதுரை ஸ்லாங்கில் பேசுவதற்கும் தனியாக பயிற்சி எடுத்துள்ளார். படத்தில் தன்னைப் பார்க்கும்போது தனக்கே வித்தியாசமாகத் தெரிவதாக தர்ஷன் கூறியுள்ளார்.கங்கை அமரன், ரோஜா போன்ற அனுபவமிக்க நடிகர்களுடன் இணைந்து நடித்தது சிறந்த அனுபவமாக இருந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். அடுத்தடுத்து கதைகளைக் கேட்டு வரும் தர்ஷன், வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடிப்பதுடன் மல்டி ஸ்டார்ஸ் படங்களிலும் நடிக்க விரும்புவதாக கூறியுள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading