கமல்ஹாசனை சந்தித்த ‘மண்டாடி’ நடிகர் சுஹாஸ் நெகிழ்ச்சி பதிவு!

‘மண்டாடி’ திரைப்படத்தில் சாட்டபுலி கதாபாத்திரத்தில் நடித்த சுஹாஸ், தனது முதல் தமிழ் படத்திலேயே கவனம் பெற்றுள்ளார். மதிமாறன் புகழேந்தி இயக்கிய இப்படம் ராமநாதபுரம் மீனவர்களின் வாழ்க்கையையும், அவர்களின் பாரம்பரியமான பாய்மரப்படகுப் போட்டியையும் மையமாகக் கொண்டது.

தெலுங்கு திரையுலகில் ஏற்கனவே அறிமுகமான சுஹாஸுக்கு, ‘மண்டாடி’ தமிழில் முக்கியமான படமாக அமைந்துள்ளது. அவரது நடிப்பை பார்த்த கமல்ஹாசன், ‘மண்டாடி’ படக்குழுவினரை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.

கமல்ஹாசனை சந்தித்த அனுபவத்தை பகிர்ந்த சுஹாஸ், அவருடன் அருகில் நின்ற அந்த தருணம் தனக்கு ஒரு கனவு நனவானது போன்ற உணர்வை கொடுத்ததாக தெரிவித்துள்ளார். நடிப்பின் என்சைக்ளோபீடியாவாகவும், வாழும் லெஜெண்டாகவும் கமல்ஹாசனை குறிப்பிட்டுள்ள அவர், இந்த சந்திப்பு எப்போதும் பாதுகாத்து வைத்திருக்க வேண்டிய நினைவாக இருக்கும் என்றும் கூறியுள்ளார்.

Add a Comment

Leave a Reply