மும்பையில் நடைபெற்று வரும் கணேஷோத்சவத்தை முன்னிட்டு, லால்பாக்சா ராஜா பந்தலுக்கு ஷாருக் கான் தனது குடும்பத்தினருடன் சென்றார். மனைவி கௌரி கான், மகள் சுஹானா கான் மற்றும் மேலாளர் பூஜா டட்லானி ஆகியோர் அவருடன் வந்திருந்தனர்.
ஷாருக் கானின் வருகையை அறிந்ததும் அங்கு கூடியிருந்த பக்தர்கள் மற்றும் ரசிகர்கள் அவரைக் காண திரண்டதால், பந்தல் பகுதியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டது. நிகழ்ச்சிக்கு ஷாருக் கான் நீல நிற குர்தாவிலும், சுஹானா பச்சை நிற பாரம்பரிய உடையிலும், கௌரி கான் மஞ்சள் நிற உடையிலும் வந்திருந்தனர்.
இந்த ஆண்டு கணேஷோத்சவத்தின் போது பிருத்விராஜ் சுகுமாரன், ரித்தேஷ் தேஷ்முக், ஜெனிலியா தேஷ்முக், ஷில்பா ஷெட்டி, சித்தார்த் மல்ஹோத்ரா உள்ளிட்ட பல பாலிவுட் பிரபலங்களும் லால்பாக்சா ராஜாவை தரிசித்துள்ளனர்.
