‘ரணபாலி’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு!

விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா கூட்டணியில் உருவாகும் ‘ரணபாலி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. ஏற்கனவே வெளியாகியுள்ள டீசருக்கு இணையத்தில் நல்ல கவனம் கிடைத்த நிலையில், தற்போது படத்தின் அடுத்தடுத்த அப்டேட்களும் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில், இப்படத்தின் பர்ஸ்ட் சிங்கிளும் வெளியிடப்பட்டுள்ளது.

‘கீதா கோவிந்தம்’, ‘டியர் காம்ரேட்’ படங்களைத் தொடர்ந்து விஜய் தேவரகொண்டாவும் ராஷ்மிகாவும் மூன்றாவது முறையாக இணைந்திருப்பதே ‘ரணபாலி’ மீதான எதிர்பார்ப்புக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. இருவரது கூட்டணியை மீண்டும் திரையில் பார்க்க ரசிகர்கள் ஆர்வமாக உள்ள நிலையில், டீசரில் இடம்பெற்ற காட்சிகளும் சமூக வலைதளங்களில் கவனம் பெற்றன.

ராகுல் சங்கிரித்யன் இயக்கும் இப்படத்தில் ஹாலிவுட் நடிகர் அர்னால்ட் வோஸ்லூ முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ‘மம்மி’ உள்ளிட்ட படங்களின் மூலம் அறிமுகமான அவருடன் பலர் இப்படத்தில் இணைந்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் டி-சீரிஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு அஜய் – அதுல் இசையமைக்கின்றனர். பெரிய அளவில் உருவாகி வரும் ‘ரணபாலி’ தமிழ், தெலுங்கு உள்ளிட்ட ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது. படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், இறுதிக்கட்டப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. உலகம் முழுவதும் வரும் அக்டோபர் 16-ம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

Add a Comment

Leave a Reply