வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவான ‘விஸ்வநாத் அண்ட் சன்ஸ்’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. சூர்யாவின் 46வது படமாக உருவான இப்படத்தில் மமிதா பைஜு, ராதிகா சரத்குமார், ரவீனா டாண்டன், பவானி ஸ்ரீ உள்ளிட்டோர் நடித்துள்ளனர். நாக வம்சி தயாரித்துள்ள இப்படம் 25 நாட்களில் ரூ.260 கோடி வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
Add a Comment
