வரலாற்றுச் சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு உருவாகி வரும் ‘ரணபலி’ என்ற புதிய திரைப்படத்தில் விஜய் தேவரகொண்டா நடித்து வருகிறார். ராகுல் சங்கிருத்தியன் இயக்கும் இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாகவும், ஹாலிவுட்டின் ‘தி மம்மி’ படத்தின் மூலம் பிரபலமான ஆர்னால்ட் வோஸ்லூ முக்கிய கதாபாத்திரத்திலும் நடிக்கின்றனர். தெலுங்கில் உருவாகும் இந்தப் படம் தமிழ், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளிலும் பான் இந்தியா வெளியீடாக வரவுள்ளது.
படம் குறித்த அறிவிப்பு வெளியான சமயத்திலேயே செப்டம்பர் 11 ரிலீஸ் தேதி என படக்குழு தெரிவித்திருந்தது. தற்போது அந்த திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் தேவரகொண்டா இடம்பெற்றுள்ள புதிய போஸ்டரை வெளியிட்டுள்ள படக்குழு, திரைப்படம் வரும் அக்டோபர் 16-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
படத்தின் சில முக்கியமான படப்பிடிப்பு பணிகள் இன்னும் நிறைவடையாமல் இருப்பதே இந்த மாற்றத்திற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது. பிரம்மாண்டமாக உருவாகி வரும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகளை முழுமையாக முடித்து, இறுதிக்கட்ட தொழில்நுட்ப வேலைகளையும் மேற்கொள்ள கூடுதல் கால அவகாசம் தேவைப்படுவதால் வெளியீடு ஒரு மாதம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
—
