10-வது ஆண்டில் ‘அர்ஜுன் ரெட்டி’… விரைவில் ரீ ரிலீஸ்!

சந்தீப் ரெட்டி வங்கா இயக்குநராக அறிமுகமான ‘அர்ஜுன் ரெட்டி’ திரைப்படம் அவரது திரைப்பயணத்தில் முக்கியமான படமாக அமைந்தது. தனது சொந்த தயாரிப்பில் உருவாக்கி வெளியிட்ட இப்படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றதைத் தொடர்ந்து, அதே கதையை ‘கபீர் சிங்’ என்ற பெயரில் இந்தியில் அவரே ரீமேக் செய்தார். பின்னர் ‘அனிமல்’ படத்தை இயக்கிய அவர், அந்தப் படத்தின் மூலம் ரூ.900 கோடிக்கும் அதிகமான வசூலைப் பதிவு செய்து கவனம் பெற்றார்.

இப்போது தனது சகோதரருடன் இணைந்து பத்ரகாளி பிக்சர்ஸ் சார்பில் புதிய தெலுங்கு திரைப்படத்தை தயாரித்துள்ளார் சந்தீப் வங்கா. வேணு கோபால் இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு ‘ரோமாஞ்சகம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. சுமந்த் பிரபாஸ் மற்றும் அனந்திகா சனில்குமார் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படம் காதல் பின்னணியில் உருவாகியுள்ளது. இதன் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் சந்தீப் வங்கா கலந்து கொண்டு பல்வேறு தகவல்களை பகிர்ந்தார்.

அப்போது தனது முதல் படமான ‘அர்ஜுன் ரெட்டி’ குறித்த சுவாரஸ்யமான அறிவிப்பை அவர் வெளியிட்டார். அந்த திரைப்படம் வெளியாகி தற்போது ஒன்பது ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதாக குறிப்பிட்ட சந்தீப் வங்கா, அதன் பத்தாவது ஆண்டை முன்னிட்டு படத்தை மீண்டும் திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளதாக தெரிவித்தார். குறிப்பாக இதுவரை வெளியாகாத நீக்கப்பட்ட காட்சிகளையும் இணைத்து மறுவெளியீடு செய்ய இருப்பதாகக் கூறிய அவர், அதற்கான பணிகளை உரிய நேரத்தில் தொடங்குவோம் என்றும் தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading