யஷ் நடிப்பில் கீது மோகன்தாஸ் இயக்கிய ‘டாக்ஸிக்’ திரைப்படம் வெளியானது முதலே சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. பிரம்மாண்டமான உருவாக்கம் மற்றும் முன்னணி நட்சத்திரங்கள் இடம்பெற்றிருந்த போதிலும், படத்தின் திரைக்கதை மற்றும் காட்சியமைப்பு குறித்து ரசிகர்கள் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.
படத்திற்கு எதிர்மறையான விமர்சனங்கள் அதிகரித்து வந்தாலும், வசூல் நிலவரம் வேறு விதமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதன்படி, வெளியான முதல் நாளிலேயே உலகளவில் ரூ.150 கோடிக்கும் அதிகமாக இப்படம் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக ஷாருக்கானின் ‘ஜவான்’ படத்தின் முதல்நாள் இந்திய வசூலை ‘டாக்ஸிக்’ முந்தியதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே, மூன்று மணி நேரத்திற்கும் மேலான படத்தின் நீளத்தையும், அதன் மீதான விமர்சனங்களையும் வைத்து இயக்குநர் ராம் கோபால் வர்மா சமூக வலைதளத்தில் மறைமுகமாக விமர்சித்துள்ளார். “நான் மீண்டும் துரந்தர் பார்த்துக்கொண்டிருக்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார் . அவர் பதிவிட்டதைத் தொடர்ந்து, ‘டாக்ஸிக்’ படத்தை மறைமுகமாக விமர்சிக்கும் வகையில்தான் இந்த பதிவு இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
