வாழ்க்கைத் துணையை குறித்து அட்வைஸ் செய்த நடிகை எமி ஜாக்சன்!

தமிழ் சினிமாவில் எமி ஜாக்சன் ‘மதராசப்பட்டினம்’, ‘தெறி’, ‘2.0’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடம் பிரபலமானவர். தமிழ் மட்டுமின்றி இந்தி, தெலுங்கு படங்களிலும் நடித்துள்ள அவர், ‘சூப்பர்கேர்ள்’ என்ற ஹாலிவுட் தொடரிலும் இடம்பெற்றுள்ளார். தனது தனிப்பட்ட வாழ்க்கையில் ஜார்ஜ் என்பவரை காதலித்த எமிக்கு 2019-ல் நிச்சயதார்த்தம் நடைபெற்றதுடன், ஆண் குழந்தையும் பிறந்தது. பின்னர் இருவரும் 2021-ல் பிரிந்தனர்.

இதையடுத்து ஆங்கில நடிகர் எட் வெஸ்ட்விக்குடன் காதல் மலர்ந்த நிலையில், 2024-ம் ஆண்டு இத்தாலியில் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்தத் தம்பதிக்கு 2025-ல் ஆஸ்கர் அலெக்ஸாண்டர் என்ற ஆண் குழந்தை பிறந்தது. தற்போது திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கும் எமி, தனது இரண்டாவது திருமண நாளை கொண்டாடியுள்ளார்.

திருமண நாளை முன்னிட்டு தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்த எமி ஜாக்சன், வாழ்க்கைத் துணையாக நெருங்கிய நண்பரைத் தேர்வு செய்வதன் சிறப்பை இந்த இரண்டு ஆண்டுகளில் உணர்ந்துள்ளதாக தெரிவித்துள்ளார். அன்பு, குழந்தைகள், சாகசங்கள், எதிர்பாராத குழப்பங்கள் என பல்வேறு அனுபவங்களுடன் கடந்த இந்த காலகட்டம் அளவில்லாத மகிழ்ச்சியை தந்துள்ளதாகக் கூறிய அவர், தனது வாழ்க்கையை வேறு யாருடனும் பகிர்ந்துகொள்ள விரும்பவில்லை என்றும் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading