”அந்த படத்தில் நடிக்காமல் தப்பிவிட்டீர்கள்!” – கியாரா அத்வானியை கலாய்த்த விக்னேஷ் சிவன்

கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘டாக்சிக்’ திரைப்படம் இன்று வெளியாகியுள்ளது. நயன்தாரா, கியாரா அத்வானி உள்ளிட்ட முன்னணி நடிகைகள் நடித்துள்ள இப்படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதில் நயன்தாராவின் கணவரும் இயக்குநருமான விக்னேஷ் சிவனும் பங்கேற்றார்.

நிகழ்ச்சியில் கியாரா அத்வானியை குறிப்பிட்டு பேசிய விக்னேஷ் சிவன், அவரை சில ஆண்டுகளுக்கு முன்பே சந்தித்து ஒரு கதையை கூறியதாக நினைவுகூர்ந்தார். கியாரா ‘கபீர் சிங்’ படத்தில் நடிப்பதற்கு முன்பாகவே அந்தக் கதையை அவரிடம் தெரிவித்ததாகவும், பின்னர் அதே கதையை ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ என்ற பெயரில் தான் இயக்கியதாகவும் அவர் கூறினார்.

தொடர்ந்து, அந்தப் படத்தில் நடிக்காமல் கியாரா தப்பித்துவிட்டதாகவும், அதனால் அவர் மிகவும் அதிர்ஷ்டசாலி என்றும் நகைச்சுவையாக தெரிவித்தார் விக்னேஷ் சிவன். தான் இயக்கிய ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ திரைப்படத்தில் கிருத்தி ஷெட்டி கதாநாயகியாக நடித்திருந்தார். படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறாததை தன்னுடைய பேச்சின் மூலம் விக்னேஷ் சிவன் நகைச்சுவையாக சுட்டிக்காட்டியது நிகழ்ச்சியில் கவனம் பெற்றது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading