அறிமுக இயக்குநர் ஸ்ரீனிவாசன் சிவாஜிராவ் இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படம் ‘திக். திக்.. திக்…’. இதில் பாவல் நவகீதன், ஜேஎஸ்கே சதீஷ் குமார், சாந்தினி தமிழரசன், சாண்ட்ரா ஏமி, பிஜேஷ் நாகேஷ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
ஜேஎஸ்கே பிலிம் கார்ப்பரேஷன் தயாரிக்கும் இப்படத்திற்கு ரகு ராஜகோபால் ஒளிப்பதிவு செய்கிறார். டிகே இசையமைக்கும் இப்படம், சென்னையை மையமாகக் கொண்ட கதைக்களத்தில் உருவாகி வருகிறது.
ஒரே இரவில் அடுத்தடுத்து நடக்கும் பரபரப்பான சம்பவங்களை மையமாகக் கொண்ட த்ரில்லர் படமாக ‘திக். திக்.. திக்…’ உருவாகியுள்ளது. சஸ்பென்ஸ் நிறைந்த திரைக்கதையுடன் குடும்ப உணர்வுகளையும் இணைத்துள்ள இப்படம், இன்றைய சமூக சூழலுக்கு பொருந்தக்கூடிய முக்கியமான கருத்தையும் பேசும் என படக்குழு தெரிவித்துள்ளது.
