பாரதிராஜாவுக்கு மணிமண்டபம்… தமிழக அரசுக்கு கமல்ஹாசன் பாராட்டு!

மறைந்த இயக்குநர் இமயம் பாரதிராஜாவுக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், நடிகர் கமல்ஹாசன் அந்த அறிவிப்புக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.

பாரதிராஜாவின் பிறந்த மண்ணிலேயே அவருக்கு மணிமண்டபம் அமைக்கப்பட உள்ளதாக தமிழக அரசு தெரிவித்திருந்தது.இதுகுறித்து நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் வெளியிட்டுள்ள பதிவில், “மண்வாசனையைத் திரையில் பதிவு செய்த இயக்குநர் பாரதிராஜாவுக்கு, அவர் பிறந்த மண்ணிலேயே மணிமண்டபம் அமைக்கப்படும் என அறிவித்திருக்கும் தமிழக அரசுக்கு என் மனமார்ந்த பாராட்டு. இது காலத்தினாற் செய்த நன்றி” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading