15 நாட்களில் ரூ.100 கோடியை கடந்த ‘டிசி’!

அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் லோகேஷ் கனகராஜ் நடிப்பில் உருவாகியுள்ள ‘டிசி’ திரைப்படம் ரசிகர்களிடம் தொடர்ந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் லோகேஷ் ‘தேவதாஸ்’ என்ற கேங்ஸ்டர் கதாபாத்திரத்திலும், அவருக்கு ஜோடியாக வாமிகா கபி ‘சந்திரா’ என்ற கதாபாத்திரத்திலும் நடித்துள்ளனர். சஞ்சனா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள நிலையில், அனிருத் இசையமைத்துள்ளார். கடந்த 7-ம் தேதி வெளியான இப்படம், 15 நாட்களில் உலகளவில் ரூ.100 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதன் மூலம் தமிழ் சினிமாவின் ரூ.100 கோடி வசூல் கிளப்பில் ‘டிசி’ திரைப்படமும் இணைந்துள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading