வெங்கட் அட்லுரி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “விஸ்வநாத் அண்ட் சன்ஸ்” திரைப்படம் ஆகஸ்ட் 14 அன்று வெளியாக உள்ளது. “கருப்பு” படத்துக்குப் பிறகு வெளியாகும் சூர்யா படமென்பதால் ரசிகர்களிடையே நல்ல எதிர்பார்ப்பு உள்ளது. மமிதா பைஜூ கதாநாயகியாகவும், ராதிகா முக்கிய வேடத்திலும் நடித்துள்ளனர். குடும்ப உறவுகளின் மதிப்பை பேசும் படமாக இது உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது.
ஹைதராபாத்தில் நடைபெற்ற புரமோஷன் நிகழ்ச்சியில் சூர்யா பேசிக்கொண்டிருந்தபோது, இயக்குநர் வெங்கட் அட்லுரி திடீரென “யாரோ அழைக்கிறார்கள்” என்று மேலே பார்க்கச் சொன்னார். சூர்யா மேலே திரும்பிய அந்த நொடியில், வெங்கட் அட்லுரி அவரது காலைத் தொட்டு வணங்கினார்.
அதை கவனித்த சூர்யா உடனே சிரித்தபடி அவரைத் துரத்தினார். இந்தக் காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. ரசிகர்கள் யாரும் தன் காலில் விழக்கூடாது என்பதில் சூர்யா எப்போதும் கடுமையாக இருப்பதால், நேரடியாக முடியாது என்பதை உணர்ந்து வெங்கட் அட்லுரி இப்படிச் செய்ததாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
