“ராம் இன் லீலா” டிரெய்லர் வெளியீடு.. ரியோ ராஜின் புதிய காதல் திரைப்படம்!

ரியோ ராஜ் நடித்துள்ள “ராம் இன் லீலா” திரைப்படம் ஆகஸ்ட் 21-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. ரிலீஸ் நெருங்கியுள்ள நிலையில், படத்தின் டிரெய்லர் வெளியாகி சமூக வலைதளங்களில் கவனம் பெற்று வருகிறது.

‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ மூலம் ஹீரோவாக அறிமுகமான ரியோ, அதன் பிறகு பல காதல் மற்றும் பொழுதுபோக்கு படங்களில் நடித்துள்ளார். இப்போது புதிய முயற்சியாக உருவாகியுள்ள இந்தப் படத்தில் அவர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார்.

அறிமுக இயக்குநர் ராம்சந்திரன் கண்ணன் இயக்கியுள்ள இந்தத் திரைப்படத்தில் வர்திகா கதாநாயகியாக நடித்துள்ளார். காதலை மையமாகக் கொண்ட காமெடி-ரொமான்டிக் படமாக இது உருவாகியுள்ளதாக கூறப்படுகிறது. இசையை அங்கித் மேனன் அமைத்துள்ளார். வெளியான டிரெய்லரில் காதல், நகைச்சுவை மற்றும் இளைய தலைமுறையைக் கவரும் காட்சிகள் இடம்பெற்றுள்ளன. ரிலீஸை முன்னிட்டு ரசிகர்கள் மத்தியில் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading