துல்கரின் “ஐயம் கேம்” ரிலீஸ் தள்ளிப்போகிறதா? ரசிகர்கள் அதிர்ச்சி!

நஹால் ஹிதாயத் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்துள்ள “ஐயம் கேம்” திரைப்படம் ஓணம் வெளியீடாக ஆகஸ்ட் 20-ம் தேதி வெளியாகும் என முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது படம் தள்ளிப்போகலாம் என்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன.

கதிர், ஆண்டனி வர்கீஸ் மற்றும் இயக்குநர் மிஷ்கின் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இந்தப் படம், சூதாட்டத்தை மையமாகக் கொண்ட த்ரில்லர் கதையாக உருவாகியுள்ளது. சண்டைப் பயிற்சியை அன்பு–அறிவு சகோதரர்கள் கவனித்துள்ளனர்.வெளியான டிரைலரில் பரபரப்பான காட்சிகளால் நல்ல எதிர்பார்ப்பை உருவாக்கியது. குறிப்பாக துல்கரின் வித்தியாசமான தோற்றம் ரசிகர்களிடையே பேசுபொருளானது.

இந்நிலையில், படத்தின் இறுதிக்கட்ட தொழில்நுட்ப பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அதனால், திட்டமிட்ட தேதியில் வெளியிடாமல் அடுத்த மாதத்திற்கு மாற்றப்படலாம் என்ற தகவல்கள் திரையுலக வட்டாரத்தில் பரவி வருகின்றன. இந்த செய்தி துல்கர் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஓணம் வெளியீடாக பிரித்விராஜின் “கலீஃபா” மற்றும் நிவின் பாலியின் “பத்லேஹம் குடும்ப யூனிட்” ஆகிய படங்களும் வெளியாகவுள்ளதால் போட்டி மேலும் அதிகரித்துள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading