‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான ரியோ ராஜ், தனது இயல்பான நடிப்பால் ரசிகர்களிடம் தனி கவனத்தை பெற்றார். அதன்பிறகு பல படங்களில் நடித்த அவர், தற்போது புதிய காதல் திரைப்படத்துடன் வருகிறார்.
அறிமுக இயக்குநர் ராம்சந்திரன் கண்ணன் இயக்கியுள்ள ‘ராம் இன் லீலா’ படத்தில் ரியோ ராஜ் கதாநாயகனாக நடித்துள்ளார். வர்திகா கதாநாயகியாக நடித்துள்ள இந்தப் படத்திற்கு அங்கித் மேனன் இசையமைத்துள்ளார்.
காதலை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் வெற்றிகரமாக நிறைவடைந்தது. தற்போது டப்பிங், ரீ-ரெக்கார்டிங் உள்ளிட்ட பின்னணி பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில், படத்தின் அதிகாரப்பூர்வ வெளியீட்டு தேதியை படக்குழு அறிவித்துள்ளது. அதன்படி, ‘ராம் இன் லீலா’ வரும் ஆகஸ்ட் 21-ம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. காதல் கலந்த பொழுதுபோக்கு கதையாக உருவாகியுள்ள இந்தப் படத்துக்காக ரசிகர்கள் எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.
