பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவரான தீபிகா படுகோனே, நீண்ட காலமாக ஹிந்தி திரைப்படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் வெளியான ‘கல்கி 2898 ஏடி’ படத்தின் முதல் பாகத்தில் நடித்த அவர், அதன் இரண்டாம் பாகத்தில் இருந்து விலகியதாக தகவல்கள் வெளியானது.
அதன்பிறகு, ‘ராக்கா’ திரைப்படத்தில் அவரை நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளது படக்குழு. தற்போது தீபிகா இரண்டாவது முறையாக தாய்மையை எதிர்நோக்கி வருவதால், விரைவில் முழு ஓய்வு எடுக்கத் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அதனால், ‘ராக்கா’ படத்தில் தனது காட்சிகள் தொடர்பான படப்பிடிப்பை விரைவாக முடிக்க அவர் தீவிரமாக செயல்பட்டுள்ளார். இந்த வாரம் தொடங்கிய அவரது காட்சிகளின் ஷூட்டிங் இன்னும் சில நாட்களில் நிறைவடையும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மும்பையில் உள்ள ஸ்டுடியோவில் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், மொத்த ஷூட்டிங் ஓரிரு மாதங்களில் முடிவடையும் என்றும், அதன் பின்னர் வெளியீட்டு தேதி அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.
