நடிகர் ரவி மோகன் தற்போது தனது தயாரிப்பு நிறுவனத்தின் முதல் படைப்பான ‘ஆன் ஆர்டினரி மேன்’ திரைப்படத்தை இயக்கி வருகிறார். இந்தப் படத்தில் யோகி பாபு கதாநாயகனாக நடிப்பது ரசிகர்களிடையே தனி எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.
சமீபத்திய பேட்டியில் தனது திரைப்பயணத்தை நினைவுகூர்ந்த ரவி மோகன், சிறுவயது முதலே சினிமா துறைக்குள் வர வேண்டும் என்பது தனது கனவாக இருந்ததாக கூறினார். ஆனால் இயக்குநராக வருவேனா, நடிகராக மாறுவேனா அல்லது வேறு தொழில்நுட்பத் துறையில் இருப்பேனா என்பது அப்போது தனக்கே தெரியாது என்றார்.
அதனால் திரைப்படத் தயாரிப்பின் பல்வேறு நுணுக்கங்களையும் கற்றுக்கொண்டதாக அவர் தெரிவித்தார். தனது ஆர்வம் எப்போதும் இயக்கத்தின் மீதே இருந்ததாகவும், நடிப்பு அனுபவத்தின் மூலம் இயல்பாக வந்த ஒன்று என்றும் கூறினார்.ஒரு நடிகராக தனது பயணம் வெற்றிகரமாக சென்றுகொண்டிருக்கும் நிலையில், தற்போது இயக்குநராக மாறுவது முற்றிலும் புதிய மற்றும் உற்சாகமான அனுபவமாக இருப்பதாக ரவி மோகன் பகிர்ந்துள்ளார்.
