“தோல்வியிலிருந்து மீள உதவியது நம்பிக்கை” – மனம் திறந்த கயாடு லோஹர்!

சில நடிகைகள் ஒரு படத்திலேயே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து விடுவார்கள். கயாடு லோகருக்கு அந்த மாற்றத்தை ஏற்படுத்திய படம் ‘டிராகன்’. அதன் பிறகு அவர் தொடர்ந்து முக்கிய நடிகர்களுடன் இணைந்து நடித்து வருகிறார்.

அவரது சமீபத்திய படமான ‘இதயம் முரளி’ நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், ஒரு பேட்டியில் வாழ்க்கை பற்றிய கேள்விகளுக்கு அவர் வெளிப்படையாக பதிலளித்தார்.

“என்னிடம் எப்போதும் இருந்த பெரிய பலம் நம்பிக்கைதான். பல விஷயங்கள் சரியாக போகவில்லை என்றாலும், மீண்டும் தொடங்க வேண்டும் என்ற எண்ணத்தை அது கொடுத்தது,” என்று அவர் கூறினார்.தனது பலவீனத்தைப் பற்றி பேசும்போது, “நான் மனிதர்களை விரைவாக நம்பிவிடுவேன். அதனால் சில நேரங்களில் பாதிக்கப்பட்டிருக்கிறேன். அந்த அனுபவங்களுக்குப் பிறகுதான் யாரை எப்படி அணுக வேண்டும் என்பதை மெதுவாக கற்றுக்கொண்டு வருகிறேன்,” என்றார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading