புகழால் மகிழ்ச்சி… ஆனால் தனிப்பட்ட சுதந்திரத்தில் இழப்பு! மனம் திறந்த கவுரி கிஷன்…

‘96’ திரைப்படத்தில் இளம் வயது ஜானுவாக நடித்து ரசிகர்களின் மனதில் இடம்பிடித்தவர் கவுரி கிஷன். விஜய் சேதுபதி, திரிஷா நடிப்பில் வெளியான இப்படத்தின் மூலம் அவருக்குப் பெரும் கவனம் கிடைத்தது. தொடர்ந்து திரைப்படங்கள் மற்றும் இணையத் தொடர்களில் நடித்து வரும் கவுரி, நடிகையான பிறகு தனது வாழ்க்கையில் ஏற்பட்ட மாற்றங்கள் குறித்து மனம் திறந்துள்ளார்.

‘96’ படத்தில் ஜானு கதாபாத்திரத்தை விரும்பும் ரசிகர்கள் தன்னிடம் மிகுந்த அன்புடன் நடந்துகொள்வதாகக் குறிப்பிட்டுள்ள அவர், அந்த அன்பைத் தனது வாழ்க்கையில் கிடைத்த பெரிய பாக்கியமாகக் கருதுவதாகத் தெரிவித்துள்ளார். ஒருநாள் நடிகையாவோம் என்ற எண்ணம்கூடத் தனக்கு இருந்ததில்லை என்றும், புகழைத் தேடி ஓடியவளும் இல்லை என்றும் கூறியுள்ளார்.

அதே நேரத்தில், திரையுலகில் கிடைத்த புகழ் தனது தனிப்பட்ட சுதந்திரத்தைக் குறைத்துவிட்டதாகவும் கவுரி கிஷன் வருத்தம் தெரிவித்துள்ளார். நண்பர்களுடன் வெளியே சென்று வழக்கம்போலப் பானிபூரி சாப்பிட வேண்டும் என்று ஆசை இருந்தாலும், முன்பு போலச் சுதந்திரமாகச் செல்ல முடிவதில்லை எனக் கூறியுள்ளார். நிஜ வாழ்க்கையில் தான் மிகவும் எளிமையான, நிதானமான நபர் என்றும், நண்பர்களுடன் நேரம் செலவிடுவதையே அதிகம் விரும்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading