AK-64 அப்டேட் எப்போது?… அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக காத்திருக்கும் அஜித் ரசிகர்கள்!

இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் மற்றும் நடிகர் அஜித் குமார் இணையும் புதிய திரைப்படம் தற்போது உருவாகி வருகிறது. தற்காலிகமாக AK-64 என்று அழைக்கப்படும் இந்த திரைப்படத்திற்கான முன்தயாரிப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.இந்நிலையில், குட் பேட் அக்லி திரைப்படம் வெளியாகி ஒன்றரை ஆண்டுகள் கடந்துவிட்ட போதிலும், AK-64 தொடர்பான எந்த அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகாததால், இந்தப் படத்தை இறுதியாக எந்த நிறுவனம் தயாரிக்கிறது என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து எழுந்து வருகிறது.

மேலும், குட் பேட் அக்லி போன்ற வெற்றிப்படத்தை வழங்கிய கூட்டணி மீண்டும் இணைந்துள்ள நிலையில், அடுத்த படத்தின் அறிவிப்பு ஏன் இன்னும் வெளியாகவில்லை என்ற ஆதங்கத்தையும் அஜித் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் வெளிப்படுத்தி வருகின்றனர்.

இந்த சூழலில், AK-64 திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வரும் ஆகஸ்ட் மாதத்தில் வெளியிட தயாரிப்பு தரப்பு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதேபோல், இந்தப் படத்தை நடிகர் அஜித் குமாரே தனது சொந்த தயாரிப்பில் உருவாக்க உள்ளதாகவும் சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது. இருப்பினும், இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading