காதல் கதையில் நடிக்கும் கிஷ்ன் தாஸ் – சஞ்சனா… வெளியான ‘சீ யூ’ ஃபர்ஸ்ட் லுக்!

அறிமுக இயக்குநர் சந்தோஷ் ஸ்ரீவஸ்டன் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய காதல் திரைப்படத்திற்கு ‘சீ யூ’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் கிஷன் தாஸ் மற்றும் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏஆர் என்டர்டெயின்மென்ட்ஸ் மற்றும் டி ஸ்டூடியோஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு ஜுனம் இசையமைத்து வருகிறார்.

கடைசியாக ‘ஆரோமலே’ திரைப்படத்தில் நடித்த கிஷன் தாஸ், இந்தப் படத்தின் மூலம் மீண்டும் ரசிகர்களை சந்திக்க உள்ளார். ‘லப்பர் பந்து’ படத்தின் மூலம் கவனம் பெற்ற சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, ‘தக் லைப்’ திரைப்படத்தில் உதவி இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். அவர் கடைசியாக ‘பரிமளா அண்ட் கோ’ படத்தில் நடித்திருந்தார்.

இந்த நிலையில், ‘சீ யூ’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் ஆர்யா வெளியிட்டு படக்குழுவுக்கு தனது வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். காதலை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இந்தப் படத்தின் ரிலீஸ் தேதி குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading