நடிகரும் இயக்குநருமான பிரித்விராஜ் சுகுமாரன் நடித்துள்ள புதிய திரைப்படம் ‘ஐ நோபடி’. ரோஷாக் படத்தின் இயக்குநர் நிசாம் பஷீர் இயக்கியுள்ள இந்தப் படத்தில், பிரித்விராஜுடன் இணைந்து நடிகை பார்வதி திருவோத்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். என்னு நிண்டே மொய்தீன் மற்றும் மை ஸ்டோரி படங்களுக்குப் பிறகு இந்த ஜோடி மீண்டும் இணைந்துள்ளது.
முழுக்க முழுக்க ஆக்ஷன் கதைக்களத்தில் உருவாகியுள்ள இப்படத்தை ஈ4 என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் இணைந்து பிரித்விராஜ் தயாரித்துள்ளார். அவரது மனைவி சுப்ரியா மேனனும் தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளார். அனிமல் படத்தின் இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ராமேஷ்வர் இசையமைத்துள்ள இப்படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றது.
வரும் 9-ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ள ‘ஐ நோபடி’ திரைப்படத்திற்கு தணிக்கை வாரியம் யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. விறுவிறுப்பான ஆக்ஷன் காட்சிகள் மற்றும் பிரித்விராஜின் மிரட்டலான தோற்றம் காரணமாக படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
