ஹீரோயினாக அறிமுகமாகும் பிக்பாஸ் பிரபலமான தர்ஷிகா!

பொன்னி’ மற்றும் ‘தாலாட்டு’ தொடர்கள் மூலம் புகழ்பெற்றவர் தர்ஷிகா. ‘பிக் பாஸ்’ 8வது சீசன் மூலம் புகழ்பெற்றார். தற்போது அவர் ‘டார்க் ஹெவன்’ என்ற படத்தின் மூலம் ஹீரோயின் ஆகியிருக்கிறார். தென்காசி மாவட்டம் மேக்கரை என்ற மலைக் கிராமத்தில் நடக்கும் மர்மமான தொடர் கொலைகளை மையமாக வைத்து உருவாகி இருக்கும் திரில்லர் படம் இது. இந்த படத்தில் ‘ராஜாராணி, திருமணம், பாரதி கண்ணம்மா’ உள்ளிட்ட பல தொடர்களில் நடித்த ஜித்து சித் நாயகனாக நடிக்கிறார். இவர்களுடன் ரித்விகா, நிழல்கள் ரவி, வேல ராமமூர்த்தி, ஜெயகுமார் ஜானகிராமன், அருள் சங்கர், பிரதீப், அலெக்ஸ், டேனி தயாள் போன்றவர்களும் நடித்திருக்கிறார்கள். மணிகண்டன் ஒளிப்பதிவு செய்துள்ளார். சக்தி பாலாஜி இசை அமைத்துள்ளார். ஜூலை 17ம் தேதி வெளியாகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading