தமிழ் சினிமாவில் நடிகராக இருந்து தமிழக முதல்வர் ஆகிவிட்டார் விஜய். சிறு குழந்தைகளையும் அவர் கவர்ந்ததற்கு முக்கியமான காரணம் அவரது நடனம். அவரது ஆரம்ப காலப் படங்களிலிருந்து கடைசியாக வெளிவந்த படம் வரை அவரது படங்களில் பாடல்கள் சூப்பர் ஹிட்டாகும். நடனம் உள்ள பாடல்களில் அவரது நடனம் அசத்தலாக இருக்கும். அப்படி அமைந்த ஒரு பாடல்தான் ‘அரபிக் குத்து’ பாடல். 2022ம் ஆண்டு வெளிவந்த ‘பீஸ்ட்’ படத்தில் இடம் பெற்ற அந்தப் பாடல் யு டியூப் தளத்தில் தற்போது 800 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. சுமார் 4 வருடங்களில் இந்த சாதனை நிகழ்ந்துள்ளது.
Add a Comment
