200 கோடிக்கு மேல் வசூலித்த ‘திரிஷ்யம் 3′ !

மோகன்லால், மீனா உள்ளிட்ட பலர் நடிப்பில், இயக்குநர் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கடந்த வாரம் மலையாளத்தில் வெளியான திரைப்படம் ‘திரிஷ்யம் 3’. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த படம், விமர்சகர்களிடமிருந்து கலவையான மற்றும் எதிர்மறையான விமர்சனங்களை பெற்றிருந்தாலும், வசூல் ரீதியாக மிகப்பெரிய சாதனையை பதிவு செய்து வருகிறது. ரசிகர்களின் ஆர்வம் மற்றும் ‘திரிஷ்யம்’ தொடருக்கான எதிர்பார்ப்பு காரணமாக, படம் தொடர்ந்து திரையரங்குகளில் நல்ல வரவேற்புடன் ஓடி வருகிறது.

தற்போது வெளியாகியுள்ள பாக்ஸ் ஆபீஸ் தகவல்களின் படி, ‘திரிஷ்யம் 3’ திரைப்படம் இதுவரை உலகளவில் சுமார் ரூ.170 கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த திரைப்படத்தின் மொத்த உலகளாவிய வியாபாரம் சுமார் ரூ.30 கோடி மட்டுமே என தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், படம் ரூ.200 கோடி வசூலை எட்டியுள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. அதன் பங்குத் தொகையாக மட்டும் தயாரிப்பாளர்களுக்கு ரூ.75 கோடிக்கு மேல் கிடைத்துள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம், திரைப்படம் இதுவரை சுமார் ரூ.45 கோடி அளவுக்கு லாபம் ஈட்டியுள்ளதாக திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கேரளாவில் மட்டும் இந்த திரைப்படம் ரூ.50 கோடிக்கும் அதிகமான வசூலை பெற்றுள்ளது. ஆனால், கேரளாவை விடவும் வெளிநாடுகளில் இப்படம் பெற்றுள்ள வரவேற்பே அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. குறிப்பாக, ஓவர்சீஸ் சந்தையில் மட்டும் படம் ரூ.95 கோடி வசூலை கடந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading