இயக்குநர் புச்சிபாபு சனா இயக்கத்தில், இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் இசையில், நடிகர் ராம் சரண் மற்றும் நடிகை ஜான்வி கபூர் உள்ளிட்ட பலர் நடித்துள்ள ‘பெத்தி’ திரைப்படத்தின் அடுத்த யூடியூப் வெளியீடாக ‘ஹெல்லல்லோ’ பாடல் நேற்று வெளியாகியுள்ளது. ஐந்து மொழிகளில் வெளியிடப்பட்ட இந்த பாடல் தற்போது 50 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை பெற்று மிகப்பெரிய ஹிட்டாக மாறியுள்ளது.
இந்த பாடல் தெலுங்கில் மட்டும் 26 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. அதேபோல் ஹிந்தியில் 11 மில்லியன், தமிழில் 7 மில்லியன், கன்னடத்தில் 4 மில்லியன் மற்றும் மலையாளத்தில் 1 மில்லியன் பார்வைகளையும் கடந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. மேலும் இந்த பாடலில் நடிகை ஸ்ருதிஹாசன் சிறப்புத் தோற்றத்தில் கவர்ச்சியான நடனத்தில் தோன்றியுள்ளார். அதேபோல் ஜான்வி கபூரும் இந்த பாடலில் இடம்பெற்றுள்ளதால் பாடலுக்கு கூடுதல் கவனம் கிடைத்துள்ளது. இருவரின் நடனமும் ரசிகர்களை பெரிதும் கவர்ந்துள்ளது.
இதற்கு முன்பு இப்படத்தின் முதல் சிங்கிளாக வெளியான ‘சிக்கிரி சிக்கிரி’ பாடல் தெலுங்கில் மட்டும் 200 மில்லியன் பார்வைகளை கடந்திருந்தது. வரும் ஜூன் 4ஆம் தேதி வெளியாக உள்ள ‘பெத்தி’ திரைப்படத்தின் வெற்றிக்கு ஏ.ஆர். ரஹ்மானின் இசையும், பாடல்களும் முக்கிய காரணமாக அமையும் என ரசிகர்கள் இப்போதே எதிர்பார்த்து வருகின்றனர்.
