‘TN 07 CM 2026’ என்ற நம்பர் பிளேட்-ஐ முதல்வர் விஜய்க்கு நினைவு பரிசாக இயக்குனர் வெங்கட்பிரபு!

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் விஜய்யின் தவெக கட்சி தனிப்பெரும் கட்சியாக 108 இடங்களில் வெற்றி பெற்று, கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை அமைத்தது. இதனைத் தொடர்ந்து, தமிழகத்தின் முதலமைச்சராக விஜய் பதவியேற்றார். அவர் முதலமைச்சராக பொறுப்பேற்ற பிறகு அரசியல் தலைவர்கள் முதல் திரையுலக பிரபலங்கள் வரை பலரும் நேரில் சந்தித்து வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், இயக்குநர் வெங்கட் பிரபுவும் இன்று முதலமைச்சர் விஜய்யை நேரில் சந்தித்து அவருக்கு சிறப்பு பரிசு ஒன்றை வழங்கியுள்ளார்.

இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளியான ‘கோட்’ திரைப்படத்தில் விஜய் கதாநாயகனாக நடித்திருந்தார். தவெக கட்சி தொடங்கப்பட்ட அதே ஆண்டில் வெளியான இந்த படத்தில், விஜய் பயன்படுத்தும் கார் நம்பர் பிளேட்டில் ‘TN 07 CM 2026’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது. விஜய் 2026ஆம் ஆண்டில் முதலமைச்சராக வருவார் என்பதை குறிக்கும் விதமாகவே அந்த நம்பர் பிளேட் அமைக்கப்பட்டிருந்ததாக ரசிகர்கள் அப்போது பேசிக்கொண்டிருந்தனர்.

இந்த நிலையில், அந்த பிரபலமான நம்பர் பிளேட்டை தற்போது முதலமைச்சர் விஜய்க்கு வெங்கட் பிரபு நினைவுப் பரிசாக வழங்கியுள்ளார். இது தொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்ட வெங்கட் பிரபு, “ஒரு வரலாறு படைக்கப்பட்டுள்ளது. அதனை முதல்முறையாக ‘கோட்’ படத்தில் நாங்கள் வெளிப்படுத்தியிருந்தோம்” என்று குறிப்பிட்டு, விஜய்க்கு பரிசு வழங்கிய புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். இந்த பதிவு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading