‘கருப்பு’ திரைப்படத்தின் BTS படங்களை பகிர்ந்த நடிகை த்ரிஷா!

தென்னிந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான சூர்யா மற்றும் திரிஷா இணைந்து நடித்துள்ள ‘கருப்பு’ திரைப்படம் கடந்த வாரம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது. ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த திரைப்படத்தை ஆர்.ஜே.பாலாஜி இயக்கியுள்ளார். வெளியான முதல் நாளிலிருந்தே இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த திரைப்படத்தில் கதாநாயகியாக நடிகை திரிஷா நடித்துள்ளார். இவர்களுடன் சுவாசிகா, இந்திரன்ஸ், யோகி பாபு, ஷிவாதா, சுப்ரீத் ரெட்டி, அனகா மாயா ரவி மற்றும் நட்டி நட்ராஜ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சாய் அபயங்கர் இசையமைத்துள்ள இப்படம், நீதிமன்ற வழக்கை மையமாகக் கொண்டு அதனுடன் கடவுள் நம்பிக்கைகள் மற்றும் சமூக அம்சங்களை இணைத்து உருவாக்கப்பட்டுள்ளது. பல்வேறு சவால்களை கடந்து வெளியான இப்படம் ரசிகர்களின் பாராட்டுகளை பெற்று, உலகளவில் ரூ.150 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த நிலையில், ‘கருப்பு’ திரைப்படத்தில் நடித்த நடிகை திரிஷா, படப்பிடிப்பு தளத்தில் எடுத்த BTS புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கங்களில் பகிர்ந்துள்ளார். படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாக பரவி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து வருகின்றன.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading