‘கட்டா குஸ்தி 2’ படத்தின் செகண்ட் லுக் போஸ்டர் வெளியாகி வைரல்!

தமிழ் சினிமாவில் முக்கிய நடிகர்களில் ஒருவராக இருக்கும் விஷ்ணு விஷால் நடிப்பில் கடந்த 2022ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘கட்டா குஸ்தி’. இந்த படத்தில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி கதாநாயகியாக நடித்திருந்தார். இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கிய இந்த திரைப்படம் நகைச்சுவை கலந்த குடும்பக் கதைக்களத்துடன் வெளியாகி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றது. இப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்திருந்தார். சுமார் ரூ.5 கோடி செலவில் உருவான இந்த திரைப்படம் உலகம் முழுவதும் ரூ.30 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து, இயக்குநர் செல்லா அய்யாவும் நடிகர் விஷ்ணு விஷாலும் மீண்டும் இணைந்து ‘கட்டா குஸ்தி 2’ படத்தை உருவாக்கியுள்ளனர். இந்த திரைப்படத்தை விஷ்ணு விஷாலின் தயாரிப்பு நிறுவனத்துடன் இணைந்து வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷ்னல் நிறுவனம் தயாரித்து வருகிறது. முதல் பாகத்தில் நடித்த ஐஸ்வர்யா லட்சுமியே இந்த படத்திலும் கதாநாயகியாக தொடர்கிறார். மேலும், முனீஸ்காந்த், காளி வெங்கட் மற்றும் கருணாகரன் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.

இந்நிலையில், தற்போது ‘கட்டா குஸ்தி 2’ திரைப்படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. அதனுடன், இப்படம் வரும் ஜூலை 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading