அதர்வாவின் பிறந்தநாளையொட்டி வெளியான ‘இதயம் முரளி’ படத்தின் BTS வீடியோ!

தமிழ் சினிமாவில் தனித்துவமான நடிகர்களில் ஒருவராக விளங்குபவர் அதர்வா. ‘பாணா காத்தாடி’, ‘பரதேசி’, ‘சண்டிவீரன்’ போன்ற திரைப்படங்களின் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தைப் பெற்றவர். சமீபத்தில் இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில் உருவான ‘பராசக்தி’ திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த அவர், தனது நடிப்பால் பாராட்டுகளையும் வரவேற்பையும் பெற்றார்.

அதனைத் தொடர்ந்து தற்போது இயக்குநர் ஆகாஷ் பாஸ்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ‘இதயம் முரளி’ திரைப்படத்தில் அதர்வா கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த திரைப்படத்தில் அதர்வாவுடன் இணைந்து பிரீத்தி முகுந்தன், கயாடு லோஹர், நட்டி நட்ராஜ், ரக்சன், தமன் மற்றும் நிஹாரிகா உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் தமன் இசையமைத்துள்ளார். இப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், நடிகர் அதர்வா இன்று தனது 37-வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் மற்றும் நண்பர்கள் பலரும் சமூக வலைதளங்கள் வாயிலாக அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் ‘இதயம் முரளி’ திரைப்படக்குழுவும் அதர்வாவுக்கு சிறப்பு வாழ்த்து தெரிவித்து, படத்தில் இடம்பெறும் சில முக்கிய காட்சிகளையும் பகிர்ந்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading