பல சிறந்த தருணங்களை உருவாக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்… அஜித் பிறந்தநாளில் இயக்குனர் ஆதிக் டிவீட்!

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித்தின் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, அவரது அடுத்த படமான ‘அஜித் 64’ குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்திருந்தனர். ஆனால், இன்று அந்த அறிவிப்பு வெளியாகவில்லை என்பது ரசிகர்களுக்கு ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

அஜித் கடைசியாக நடித்த ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் வெளியாகி ஒரு வருடத்திற்கும் மேலாகிவிட்டது. அதன் பின்னர் உடனடியாக புதிய படத்தை தொடங்காமல், கார் பந்தயத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். இது அவரது சினிமா ரசிகர்களுக்கு சற்று வருத்தத்தை அளித்தாலும், அவர் தனது விருப்பமான துறையில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையில், ‘அஜித் 64’ படத்தை இயக்க உள்ளதாகக் கூறப்படும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், அஜித்திற்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து, தனது உணர்வுகளை பகிர்ந்துள்ளார். அதில், “என் அன்பிற்கினிய சார், இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். எனக்கும் எங்கள் அனைவருக்கும் உந்துசக்தியாக இருந்து, இந்தியாவை பெருமைப்படுத்தியதற்கு நன்றி. நீங்கள் இந்த நாட்டின் மிகப்பெரிய பெருமை. உங்கள் அன்பையும் கருணையையும் பெறுவது எனக்கு எப்போதும் ஒரு ஆசீர்வாதமாக உணரப்படுகிறது. உங்களை முதன்முதலில் சந்தித்த நாளையும், உங்களுடன் பணியாற்றிய அனுபவத்தையும், ‘குட் பேட் அக்லி’ மூலம் உருவான மறக்க முடியாத நினைவுகளையும் நான் எப்போதும் நினைவில் வைத்திருப்பேன். இன்னும் பல சிறந்த தருணங்களை உருவாக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்,” என்று குறிப்பிட்டுள்ளார்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading