‘ராக்கா’ படத்திற்காக இயக்குனர் அட்லியின் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகையான தீபிகா படுகோனே, தற்போது ஷாருக்கானுடன் இணைந்து ‘கிங்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் விரைவில் வெளியாக இருக்கிறது. அதனை தொடர்ந்து இயக்குனர் அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக ‘ராக்கா’ படத்திலும் நடித்து வருகிறார். இதில் ராஷ்மிகா, மிருணாள் தாக்கூர் உள்ளிட்டோரும் நடிப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் படத்தில் நடிக்கும் நடிகர்-நடிகைகளுக்கு தரப்பட்ட சம்பளம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி அல்லு அர்ஜுனுக்கு ரூ.175 கோடியும், இயக்குனர் அட்லிக்கு ரூ.100 கோடியும் சம்பளமாக வழங்கப்படுகிறதாம். தீபிகா படுகோனேவின் சம்பளம் ரூ.25 கோடியாக உயர்ந்திருக்கிறது. ராஷ்மிகாவுக்கு ரூ.8 கோடியும், மிருணாள் தாக்கூருக்கு ரூ.5 கோடியும் சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளதாம்.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading