மராட்டிய அரசு போக்குவரத்து கழகத்தின் புதிய விளம்பர தூதர்களாக ரிதேஷ் தேஷ்முக் மற்றும் ஜெனிலியா நியமனம்!

மராட்டிய அரசு போக்குவரத்து கழகத்தின் புதிய விளம்பர தூதர்களாக இந்தி திரைப்பட நட்சத்திர தம்பதிகளான ரிதேஷ் தேஷ்முக் மற்றும் ஜெனிலியா நியமிக்கப்பட்டு உள்ளனர். இதுதொடர்பாக மராட்டிய அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “நடிகர் ரிதேஷ் தேஷ்முக் மற்றும் அவரது மனைவி ஜெனிலியா ஆகியோர் அடுத்த 5 ஆண்டுகளுக்கு அரசு போக்குவரத்து கழகத்தின் விளம்பர தூதர்களாக செயல்படுவார்கள். சாலை பாதுகாப்பு, பயணிகள் விழிப்புணர்வு மற்றும் சமூக கருத்துக்கள் தொடர்பான பிரசாரங்களில் இவர்கள் ஈடுபடுவார்கள்” என்றார். நாட்டிலேயே மிகப்பெரிய போக்குவரத்து கழகங்களில் ஒன்றாக விளங்கும் மராட்டிய அரசு போக்குவரத்து கழ கம், 16 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பஸ்களை இயக்கி வருகிறது. தினசரி 55 லட்சம் பயணிகள் இதில் பயணம் செய்கின்றனர். முன்னதாக கடந்த 2023-ம் ஆண்டு மராத்தி நடிகர் மகரந்த் அனஸ்புரே விளம்பர தூதராக நியமிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading