‘கயல்’பட கதாநாயகன் சந்திரன் நடித்துள்ள ‘சிங்கா’ படத்தின் டீஸர் வெளியீடு!

இயக்குநர் பிரபு சாலமன் இயக்கத்தில் 2014ஆம் ஆண்டு வெளியான ‘கயல்’ திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமாகி கவனம் பெற்றவர் சந்திரன். அதன்பிறகு அவருக்கு தொடர்ந்து பெரிய வெற்றிப் படங்கள் அமையாமல் இருந்தது குறிப்பிடத்தக்கது. கடைசியாக, 2022ஆம் ஆண்டு ‘மன்மத லீலை’ திரைப்படத்திலும், 2024ஆம் ஆண்டு ‘சட்னி சாம்பார்’ என்ற இணையத் தொடரிலும் நடித்திருந்தார். தற்போது, ‘சிங்கா’ என்ற புதிய திரைப்படத்தின் மூலம் மீண்டும் திரை உலகில் என்ட்ரி கொடுக்கிறார்.

எஸ்ஆர் ஃபிலிம்ஸ் மற்றும் ருத்ரம் சினிமாஸ் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தை ராஜ துரை சிங்கம் இயக்குகிறார். ஒரு நாயை மையமாகக் கொண்டு கதை அமைக்கப்பட்டுள்ள இப்படம், வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகியுள்ள து.

இதில் சிஜா ரோஸ், மீனாட்சி ரவீந்திரன், ஆதித்யா கதிர், அரிஸ்டோ சுரேஷ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்தின் மூலம் கயல் சந்திரன் மிகப்பெரிய வெற்றியைப் பெறுவாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.

Add a Comment

Leave a Reply

Discover more from Touring Talkies

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading