‘மகாஅவதார் நரசிம்மா’ அனிமேஷன் படத்தை அஸ்வின் குமார் இயக்கியிருந்தார். இந்த படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைத்திருந்தார். அனிமேஷனில் வரும் காட்சிகள் உலகத் தரத்தில் இருப்பதாக சினிமா ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கூறி வருகிறார்கள். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கக்கூடிய படமாக வரவேற்பைப் பெற்றதுடன் ரூ.300 கோடிக்கும் அதிகமாக வசூலித்து ஆச்சரியப்படுத்தியது. மகாவிஷ்ணுவின் பத்து அவதாரங்களை விவரிக்கும் வகையில் அடுத்தடுத்த படங்கள் வெளியாக உள்ளன.இந்த நிலையில், 10 அவராதங்களில் இரண்டாவது அவதாரத்திற்கான அறிவிப்பு நாளை காலை 11.22 மணிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Add a Comment
